மதுரை, : மதுரை சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
கராத்தே பள்ளி தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். ஏழு வயது பிரிவில் மதுரை சுதன்பாண்டி, பிரதீஷ், தேனி தர்ஷன் வெற்றிபெற்றனர்.8 - 9 வயது பிரிவில் துாத்துக்குடி எட்பர்க், திண்டுக்கல் செல்வகுமார், மதுரை தர்சனபாலா, பெண்கள் பிரிவில் விருதுநகர் பயோஜா, நெல்லை நேசிகா, மதுரை புவனா வெற்றி பெற்றனர்.10 - 11 வயது பிரிவில் திண்டுக்கல் சக்திபாலன், மதுரை லோகித், சூர்யசித்தார்த், பெண்கள் பிரிவில் மதுரை செல்வதாரிணி, நெல்லை கிசானா, தேனி கிரினி வெற்றி பெற்றனர்.
12 - 13 வயது பிரிவில் மதுரை சாய் வில்சன், தீரஜ், துாத்துக்குடி போரீஷ்குமார், பெண்கள் பிரிவில் மதுரை காவ்யா, தேனி ஸ்வாதிகா, திண்டுக்கல் காசினி வெற்றி பெற்றனர்.14 - 15 வயது பிரிவில்மதுரை அவினாஷ், திண்டுக்கல் அஸ்வின், துாத்துக்குடி விக்னேஸ்வரன், 16 - 17 வயது பிரிவில்மதுரை கண்ணா, திண்டுக்கல் பிரசன்னா, விக்னேஸ்வரன், 18 வயது பிரிவில் மதுரை ஹரிபிரசாத், தீரஜ், பிரசன்னா வெற்றி பெற்றனர்.மதுரை மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE