திருவாடானை : திருவாடானை தாலுகாவில் நத்தம் நில அளவை ஆவணங்களை கணினியில் பதிவு செய்ய இருப்பதால் அதற்கான பதிவேடுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வி.ஏ.ஓ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாசில்தார் மாதவன் கூறியதாவது:இத்தாலுகாவில் நத்தம் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவை கணினியில் பதிவு செய்யும் பணி நடைபெறவுள்ளது.100 சதவீத பணிகள் முடிந்தவுடன் ஆவணங்களை இணையதளம் மூலமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் இனி வரும் காலங்களில்இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வகையில் இப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் கிராம கணக்குகளை நில அளவை பிரிவில் ஒப்படைக்க வி.ஏ.ஓ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE