பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் மாறும் மேகமலை சரணாலயம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
சின்னமனுார் : மேகமலை வனஉயிரின சரணாலயம், ஸ்ரீவில்லிப்புத்துார் சாம்பல்நிற அணில்கள் சரணாலயத்தை இணைத்து ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் சரணாலயம் என பெயர் மாற்றப்பட உள்ளது. குமுளி- - தேனி வரை ரோட்டிற்கு கிழக்கு பகுதி மேகமலை வனஉயிரின சரணாலயம், மேற்கு பகுதிகள் ரிசர்வ் பாரஸ்ட் என அறிவிக்கப்பட்டது. மேகமலை வனஉயிரின சரணாலயம் உருவானபின், வனஉயிரினங்கள் பாதுகாப்பு

சின்னமனுார் : மேகமலை வனஉயிரின சரணாலயம், ஸ்ரீவில்லிப்புத்துார் சாம்பல்நிற அணில்கள் சரணாலயத்தை இணைத்து ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் சரணாலயம் என பெயர் மாற்றப்பட உள்ளது.

குமுளி- - தேனி வரை ரோட்டிற்கு கிழக்கு பகுதி மேகமலை வனஉயிரின சரணாலயம், மேற்கு பகுதிகள் ரிசர்வ் பாரஸ்ட் என அறிவிக்கப்பட்டது. மேகமலை வனஉயிரின சரணாலயம் உருவானபின், வனஉயிரினங்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புலிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க மேகமலை சரணாலயத்தை, புலிகள் சரணாலயமாக மாற்ற பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் 485 சதுர கி.மீ., சுற்றளவு கொண்டது. இதற்கு தென்மேற்கில் பெரியாறு புலிகள் சரணாலயமும், வடமேற்கில் மேகமலை சரணாலயம் உள்ளது.

இரு சரணாலயங்களை இணைத்து புலிகள் சரணாலயமாக மாற்றும் போது பெரியாறு புலிகள் சரணாலயமும் இணைகிறது.வனத்துறை உயர் அதிகாரி கூறுகையில், ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை சரணாலயங்களை (எஸ்.எம்.டி.ஆர்.) எனும் இரண்டையும் இணைந்து ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. விரைவில் மத்திய வனம் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிடும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X