பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு அலுவலகங்கள்அருகே தேங்கும் நீர்

Added : டிச 07, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மழைபெய்தால் அரசு அலுவலகங்கள் அருகே நீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை அலுவலகம், ஆயுதப்படை மைதானம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நகராட்சி பகுதியிலுள்ள தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் போதிய வடிகால் வசதியின்றி சிறிய மழைபெய்தால் கூட

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மழைபெய்தால் அரசு அலுவலகங்கள் அருகே நீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போக்குவரத்து பணிமனை அலுவலகம், ஆயுதப்படை மைதானம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நகராட்சி பகுதியிலுள்ள தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் போதிய வடிகால் வசதியின்றி சிறிய மழைபெய்தால் கூட மேற்கண்ட இடங்களில் நீர் தேங்கிவிடுகிறது.குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாய்க்கால் சரிவர பராமரிக்கப்படாமல் அருகேயுள்ள ஊரணிகளுக்கு முழுமையாக நீர் செல்லமுடியாமல் தேங்குகிறது. இதேப்போல ராமேஸ்வரம் ரோடு, சின்னக்கடை, சிவஞானபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் ரோடு சேதமடைந்து குண்டும்குழியுமாக சேறும் சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X