ராமநாதபுரம் : புரெவி புயலுக்கு ராமேஸ்வரம் பகுதியில் சேதமடைந்த படகுகளுக்கு புதிய காப்பீடு திட்டத்தின் பயன் பெறலாம். மீன்வளத்துறை மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
புரெவி புயல் காரணமாக ராமேஸ்வரம்,பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் 2ம் தேதி முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ராமேஸ்வரம் பகுதியில்இருந்து வல்லம், விசைப்படகுகள் குந்துகால் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட வல்லம், படகுகளும் பலத்த காற்று, மழைக்கு 34 வல்லங்களும், 27 விசைப்படகுகளும் சேதமடைந்துள்ளன.சேதமடைந்த படகுகளுக்கு ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. மீன்பிடி படகுகளுக்கு அரசு டீசல் மானியம் வழங்குவதால் அவை காப்பீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால், போதிய விழிப்புணர்வு இன்றி காப்பீடு செய்யாமல் படகுகளை இயக்குகின்றனர். தற்போது புதிய காப்பீடு திட்டத்தில் படகின் மொத்த மதிப்பில் ஒரு சதவீதம் பணம் செலுத்த வேண்டும், 30 மீனவர்கள்தற்போது விண்ணப்பித்துஉள்ளனர். காப்பீடுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளது என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE