போடி : போடி செட்டிகுளம் கண்மாயிலிருந்து டொம்புச்சேரி கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலின் ஆக்கிரமிப்பால் கண்மாயில் நீரை முழுவதும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போடி பொட்டல்களத்தில் உள்ளது செட்டிகுளம் கண்மாய். போடி மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் நீர் செட்டிகுளத்தில் நிரப்படும். செட்டிகுளம் நிரம்பி மறுகால் வாய்க்கால் வழியாக டொம்புச்சேரி டொம்பிச்சியப்பன் கண்மாய்க்கு நீர் செல்லும். இதற்காக 8 கி.மீ., துாரம் வாய்க்கால் பொதுப்பணித்துறை பராமரித்து வருகின்றனர். இந்த வாய்க்கால் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 3 கி.மீ.,துாரம் பராமரிக்காமல் உள்ளன. நீர்செல்ல முடியாத நிலையில் வாய்க்காலின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ளனர்.
மழைக்காலங்களில் கண்மாயில் மழைநீர் முழுவதும் சேமிக்க முடிவதில்லை. ஆக்கிரமிப்பு அகற்றி வாய்க்கால் சீரமைப்புசெய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE