மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் புரெவி புயல் எதிரொலியால் இரு தினங்களுக்கு பிறகு சுற்றுலா பகுதிகள் நேற்றுதிறக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவில் புரெவி புயலால் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஆரஞ்ச்மற்றும் எல்லோ' அலர்ட்டுகளைவிடுத்தது.ஆனால் புயல்வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் மழை சற்று குறைந்தது. எனினும் இடுக்கி மாவட்டத்தில் டிச.,4,5 ஆகிய தேதிகளில் சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டு, மாவட்டத்திற்குள் பயணிகள் வர தடை செய்யப்பட்டனர்.மழை குறைந்ததால் நேற்று சுற்றுலா பகுதிகள் திறக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மூணாறில் ராஜமலை, மாட்டுபட்டி மற்றும் குண்டளை ஆகிய அணைகள், எக்கோ பாய்ண்ட் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பகலில் விட்டு,விட்டு மழை பெய்ததால் பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இயலாமல் திண்டாடினர்.---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE