ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு கூட்டம் குடியிருப்பு பகுதியில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா, ஒன்றிய கவுன்சிலர் மருது உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.சங்க தலைவராக ஓய்வு தாசில்தார் கணபதி காந்தம், செயலாளராக மணிமாறன், இணை செயலாளராக கிருபா சேகரன், பொருளாளராகஅன்புச்செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE