பொது செய்தி

தமிழ்நாடு

துவக்கம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை விளக்குத்துாணில் உள்ள துணிக்கடையில் நடந்த தீ விபத்தில் சுவர் விழுந்தது. இதில் தீயணைப்பு மீட்பு பணியில் இருந்த இரு வீரர்கள் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மீட்புப் பணிதுறை இயக்குனர் ஜாபர்சேட் மாவட்டந்தோறும் சேதமடைந்த, ஆபத்தான கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டார். சிறப்பு குழு நியமனம்:இதனை தொடர்ந்து தேனி, ஆண்டிபட்டி,

மதுரை விளக்குத்துாணில் உள்ள துணிக்கடையில் நடந்த தீ விபத்தில் சுவர் விழுந்தது. இதில் தீயணைப்பு மீட்பு பணியில் இருந்த இரு வீரர்கள் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மீட்புப் பணிதுறை இயக்குனர் ஜாபர்சேட் மாவட்டந்தோறும் சேதமடைந்த, ஆபத்தான கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

சிறப்பு குழு நியமனம்:இதனை தொடர்ந்து தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையிலான சிறப்பு தனிப்படை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சுண்ணாம்பு, மண் சுவர்களான கட்டடங்கள், இரும்பு கொட்டைகைகள், தகர மேல்கூரை அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள். விபத்து ஏற்படும் போது பாதுகாப்பு தீயணைப்பான்கள, முதலுதவிக்கான உபகரணங்கள் இல்லாத நிறுவனங்களின் கணக்கெடுக்கும் பணி துவங்கியள்ளன.

மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கவிதா கூறுகையில், ஆபத்தான, பழுதடைந்த கட்டடங்கள் கணக்கெடுக்கும் பணி பணி துவங்கியுள்ளன. சேதமடைந்த கட்டங்கள் என தெரியவந்தால் அதன் உரிமையாளரிடம் கட்டடத்தை புதுப்பிக்க அறிவுறுத்தப்படும். விதிகள் படி, தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாத நிறுவனங்கள், உபகரணங்கள் இல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X