மதுரை : மதுரை கே.புதுார் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் டிச., 12 வரை நேரடி மாணவியர் சேர்க்கை நடக்கிறது.வேலைநாட்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நேரில் பெறப்படும் விண்ணப்பங்களின்படி விதிகளை பின்பற்றி மாணவியர் சேர்க்கை நடக்கும்.
எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். டி.டி.பி.ஓ., சி.ஓ.பி.ஏ., தையல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், காஸ்மோட்டாலஜி, மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் தொழிற் பிரிவுகளை தேர்வு செய்யலாம். பயிற்சியில் சேருவோருக்கு மாதம் ரூ.500 உதவி தொகை, பஸ் கட்டணம் சலுகை, இலவச சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடைகள், ஒரு செட் காலணிகள் வழங்கப்படும்.விவரங்களுக்கு 0452 - 256 0544ல் தெரிந்து கொள்ளலாம் என முதல்வர் அமுதா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE