எரியோடு : நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்காக இரு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் அறிவித்த ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
வடமதுரையில் இருந்து தும்மலக்குண்டு, பி.கொசவபட்டி, மாரம்பாடி வழியே வேடசந்துாருக்கு ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நல்லமனார்கோட்டையில் மேற்கூரையின்றி இருக்கும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குகிறது. இங்கு நீரை வெளியேற்ற வைத்திருந்த மோட்டார் திருடு போனதால் ரயில்வே நிர்வாகம் இப்பகுதியை கண்டு கொள்ளவில்லை. இதனால் லாரி தவிர வேறு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இப்பிரச்னைக்காக நல்லமனார்கோட்டை, மாரம்பாடி மக்கள் ரயில் மறியல் போராட்டம் செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக ஒன்றிய அலுவலகத்தில் ஏ.பி.டி.ஓ., திருமலைச்சாமி, மண்டல துணை தாசில்தார் தன்னாசிதுரை தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் மேற்கூரை அமையும் வரை நீர் தேங்காமல் அகற்றுவதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்ட முடிவை மக்கள் கைவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE