சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து நிபந்தனை ஜாமின்

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே முருகனேரி பட்டாசு ஆலையில் அக்.,23ல் தீ விபத்து ஏற்பட்டது.எட்டுப்பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். உரிமையாளர் சண்முகராஜா, குத்தகைக்கு எடுத்து நடத்திய விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் வைரமுத்து மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். வைரமுத்து, ''பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்

மதுரை : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே முருகனேரி பட்டாசு ஆலையில் அக்.,23ல் தீ விபத்து ஏற்பட்டது.எட்டுப்பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். உரிமையாளர் சண்முகராஜா, குத்தகைக்கு எடுத்து நடத்திய விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் வைரமுத்து மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வைரமுத்து, ''பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. பேரையூர் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தர வாதம் தாக்கல் செய்ய வேண்டும். போலீசில் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாகக்கூடாது, என நிபந்தனை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X