ஒட்டன்சத்திரம் : 'தி.மு.க., வில் வாரிசு அரசியல் உள்ளது' என, ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க., சார்பில் சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., நகர செயலாளர் உதயம் ராமசாமி பங்கேற்றனர்.அமைச்சர் சீனிவாசன் பேசியது: மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள நல்ல விசயங்களை முதல்வர் ஆதரிக்கிறார். இச்சட்டத்தால் விவசாய உற்பத்தி பொருட்களைஎங்கு வேண்டுமானாலும் விற்கலாம். விவசாயிகள் மட்டுமே முதலாளி. விவசாயிகள் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொண்டு வந்த சட்டம் தவறானது என பாராளுமன்றத்தில் தி.மு.க.,வினர் பேசியிருக்க வேண்டும்.
அதைவிட்டு விட்டு, தமிழகத்தில் கறுப்புக் கொடி காட்டி போராடுவது ஏன். கேட்டால் 'விடியலை நோக்கி' என்கின்றனர். அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இல்லை. ஆனால் தி.மு.க., வாரிசு அரசியல் கட்சி தான், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE