ஐதராபாத்: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், கடந்த முறை நான்கு வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற, பா.ஜ., இந்த முறை, 48 வார்டுகளை கைப்பற்றி, இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளது.

இதனால், தெலுங்கானா முதல்வரும், ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் கலக்கத்தில் உள்ளர். பா.ஜ., தலைவர்களோ, உற்சாகத்தில் உள்ளனர். வடக்கைப் போல தெற்கிலும் ஆட்சி அமைக்க, பா.ஜ., கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும், இந்த சட்டசபை தேர்தலில் நல்ல மாற்றம் வரும் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். அடுத்த சில வாரங்களில் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், பிரதமர் மோடி.

அப்போது ரஜினியை சந்திப்பார் என, டில்லியில் சொல்லப்படுகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில், பா.ஜ., மேலிடம் கறாராக உள்ளது. 'இதற்கான சில அதிரடி திட்டங்களையும் கைவசம் வைத்துள்ளோம். பொருத்திருந்து பாருங்கள்' என, கண் சிமிட்டுகின்றனர் சீனியர் தலைவர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE