சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்தீயை தடுக்க அனுமதித்த நிதி என்னவாயிற்று மாநில அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை : வனத்தீயை தடுக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி செலவிடப்பட்டதா என தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கொடைக்கானல் வழக்கறிஞர் மனோஜ் இமானு வேல் தாக்கல் செய்த மனு: தமிழக வனப்பகுதிகளில் 2009 முதல் 2017 வரை 5336 தீ விபத்துக்கள் நடந்தன. இதனால் 13 ஆயிரத்து 679 எக்டேர் வனம் பாதிக்கப்பட்டது. வனத்தில் தீ விபத்தை தடுக்க தேசிய செயல் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.

மதுரை : வனத்தீயை தடுக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி செலவிடப்பட்டதா என தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கொடைக்கானல் வழக்கறிஞர் மனோஜ் இமானு வேல் தாக்கல் செய்த மனு: தமிழக வனப்பகுதிகளில் 2009 முதல் 2017 வரை 5336 தீ விபத்துக்கள் நடந்தன. இதனால் 13 ஆயிரத்து 679 எக்டேர் வனம் பாதிக்கப்பட்டது. வனத்தில் தீ விபத்தை தடுக்க தேசிய செயல் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. அதை தமிழகத்தில் முறையாக பின்பற்ற வேண்டும். தீயை அணைக்க புது விஞ்ஞான முறைகளை கையாள வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட வேண்டும். கொடைக்கானல் மலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

அங்கு கூடுதல் தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனோஜ் இமானுவேல் குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு, 'தீ தடுப்பு தேசிய செயல் திட்டம் செயல்படுத்த 2016-17 ல் ரூ.50 கோடி, 2017-18 ல் ரூ.50 கோடி மாநில அரசுக்கு அனுமதிக்கப்பட்டது. இதற்கு மாநில அரசு பயன்பாட்டுச் சான்று வழங்கவில்லை. 2018-19ல் அனுமதித்த ரூ.105.88 லட்சத்தை மாநில அரசு பயன்படுத்தவில்லை. இதை ஏதாவது பேரிடர் நடக்கும்போது விடுவிக்க தொகையை மத்திய அரசு திரும்பப் பெற்றது,' என தெரிவித்தது.மாநில அரசுத் தரப்பில் கூடுதல் பதில் மனு செய்ய அவகாசம் கோரப்பட்டது. மாநில அரசு பதிலளிக்க அடுத்த வாரம் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X