தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசுப்பணியில் 20% இடஒதுக்கீடு என முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தின் முழுப்பயனும் தமிழ்வழி மாணவர்களுக்கே கிடைப்பற்கு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றினோம். 8 மாதங்களாக கவர்னரின் ஒப்புதலை தமிழக முதல்வர் பெறாதது ஏன்? இதற்கும் தி.மு.க., போராட வேண்டுமா?ஸ்டாலின், தி.மு.க., தலைவர் எஸ்.சி., பிரிவில் சேர்க்கப்பட்டதால் தேவேந்திரகுல வேளாளர்கள் பெற்ற பலன்களைக் காட்டிலும் இழப்புகளே அதிகம்.
குறிப்பாக அவர்கள் முன்பில்லாத சமூக ஒதுக்குமுறைகளுக்கு ஆளானார்கள். அற்பளவு அரசு வேலையை தவிர, வேறு எந்தத் துறைகளிலும் முன்னேற முடியாத அளவிற்கு முட்டுக் கட்டைகள் எழுந்தன.ஷியாம் கிருஷ்ணசாமிபுதிய தமிழகம் இளைஞரணி தலைவர் தமிழகத்தை தாக்கிய நிவர்புயல் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு உடனடியாக பெற்று தர வேண்டும்.வாசன், த.மா.கா., தலைவர்செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்திய பல்கலையுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சீமான்நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE