வாலாஜாபாத் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி சார்பில், 1,000 பேருக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி கட்டடம் அருகே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், 4ம் ஆண்டு நினைவு தினம், நேற்று முன் தினம் அனுசரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி மாவட்ட செயலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில், காஞ்சிபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஜெயலலிதா உருவ படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.அதை தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் கழக மாநில இணைச் செயலர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE