சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் லஞ்சம் ஊழியருக்கு ஜாமின்

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை : சிவகாசி ஜாபர் சாதிக் திருத்தங்கல்லில் போலீசாக பணிபுரிகிறார். சிவகாசியில் புது வீட்டிற்கு சொத்துவரி செலுத்த அந்நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை அணுகினார். அவர் ரசீது தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஜாபர் சாதிக் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.ஜாபர் சாதிக்கிடம் நவ.,3ல் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு போலீசார்

மதுரை : சிவகாசி ஜாபர் சாதிக் திருத்தங்கல்லில் போலீசாக பணிபுரிகிறார். சிவகாசியில் புது வீட்டிற்கு சொத்துவரி செலுத்த அந்நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை அணுகினார்.

அவர் ரசீது தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஜாபர் சாதிக் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.ஜாபர் சாதிக்கிடம் நவ.,3ல் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கார்த்திகேயன், 'முன்விரோதத்தில் தவறாக என்னை வழக்கில் சேர்த்துஉள்ளனர். ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. விருதுநகர் சூலக்கரை அன்னை சத்யா ஆதரவற்றோர் காப்பகத்திற்கு மனுதாரர் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். கீழமை நீதிமன்றத்தில்ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்.போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X