தமிழ்நாடு

கோரிக்கை! 'ஜீப்ரா கிராசிங்' அழித்து தடுப்பு .... உயிர்பலி அபாயத்தில் மக்கள்

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020
Share
Advertisement
மாதவரம் : நெடுஞ்சாலையில், 'ஜீப்ரா கிராசிங்'கை அழித்து, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், சாலையை கடப்போர், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தடுப்பை அகற்றி, 'சிக்னல்' மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தட்டான் குளம் சாலைசென்னை, மாதவரம் பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகர் சுற்றுவட்டாரங்களில், ஒரு லட்சம் பேர்
கோரிக்கை!  'ஜீப்ரா கிராசிங்' அழித்து தடுப்பு .... உயிர்பலி அபாயத்தில் மக்கள்

மாதவரம் : நெடுஞ்சாலையில், 'ஜீப்ரா கிராசிங்'கை அழித்து, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், சாலையை கடப்போர், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பை அகற்றி, 'சிக்னல்' மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தட்டான் குளம் சாலைசென்னை, மாதவரம் பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகர் சுற்றுவட்டாரங்களில், ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.அவர்கள், மாதவரம் மண்டல அலுவலகம், குடிநீர் வாரிய அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, மாதவரம் தாலுகா மற்றும் காவல் துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சென்று வர, தட்டான் குளம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் போக்கு வரத்து வசதிக்காக, தட்டான்குளம் சாலை - கணபதி கார்டன் சாலை வழியாக, தடம் எண்: எஸ்61 மினி பஸ் இயக்கப் பட்டது.இதற்காக, ஜி.என்.டி., சாலையில், 203 அடிக்கு இடைவெளி விடப்பட்டிருந்தது. மேலும், ஜீப்ரா கிராசிங் வரையப்பட்டிருந்தது.ஆனால், கடந்தாண்டு இறுதியில், போக்குவரத்து போலீசார், இந்த இடத்தில் தடுப்பு அமைத்தனர். இதனால், மினி பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டது.அவலநிலைகுறிப்பாக, சிறுவர் முதல் பெரியோர் வரை, இந்த சந்திப்பை கடக்க கடும் அவதியுறுகின்றனர். சாலை தடுப்புக்கு இடையே, ஒருவர் மட்டுமே நுழைந்து செல்ல இடைவெளி விடப்பட்டு உள்ளது.

இதனால், ஜி.என்.டி., சாலையின் இருபுறமும், வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக, பெண்கள், முதியோர், நோயாளிகளின் நிலை, பரிதாபமாக உள்ளது. இரவில், நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது.மேலும், அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவை, பொன்னியம்மன்மேடு பகுதிக்கு, 5 கி.மீ., துாரம் சுற்றிவர வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டால், நிலைமை மேலும் மோசமாகும்.இது குறித்து, மாதவரம் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், மேற்கண்ட சாலை சந்திப்பில் உள்ள தடுப்பை அகற்றி, சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X