கூடுதல் இழப்பீடு வழங்க கோரி இறந்தவர் உடலை வாங்க மறுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் இழப்பீடு வழங்க கோரி இறந்தவர் உடலை வாங்க மறுப்பு

Added : டிச 07, 2020
Share
காஞ்சிபுரம் : களக்காட்டூரில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த, அரசு பெண் பணியாளர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். காஞ்சிபுரம், ஓரிக்கை ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் சரண்யா, 26. மாற்றுத்திறனாளி. காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூரில் உள்ள வேளாண் விதை விற்பனை மையத்தில், இளம் நிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.அவர் அலுவலகத்தில்

காஞ்சிபுரம் : களக்காட்டூரில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த, அரசு பெண் பணியாளர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம், ஓரிக்கை ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் சரண்யா, 26. மாற்றுத்திறனாளி. காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூரில் உள்ள வேளாண் விதை விற்பனை மையத்தில், இளம் நிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.அவர் அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லை. நேற்று முன்தினம் மாலை, அருகிலுள்ள வீட்டு கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்று உள்ளார்.செல்லும் வழியில், கழிவு நீர் தொட்டி மூடி திறந்து இருந்தது. அந்த இடத்தில், மழை நீர் தேங்கி இருந்ததால், தெரிய வில்லை.சரண்யா தண்ணீரில் நடந்து செல்லும் போது கழிவு நீர் தொட்டியில் விழுந்தார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.அவரது உடல், காஞ்சி புரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.நேற்று காலை, அவரது உறவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மருத்துவ மனைக்குச் சென்றனர். இறந்தவர் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இறந்தவர் உடலை வாங்க மறுத்தனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் மித்ராதேவி அங்கு சென்று பேச்சு நடத்தினார். அதன்பின், மதியம் அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X