கிண்டி : கடந்த, 2015ல், உயர் அதிகாரிகள் போட்ட உத்தரவை, வார்டு பொறியாளர்கள் மதிக்காததால், வேளச்சேரி, நேதாஜி நகர் பகுதி, மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு பருவமழையின் போதும், கிண்டி, வேளச்சேரி பகுதிகள் பாதிக்கப்படும். வேளச்சேரி ஏரி, கிண்டி எல்லை வரை இருந்தது. இந்த ஏரி, ஆக்கிரமிப்பு, அரசு திட்டங்களுக்கு கையகப் படுத்தியது போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பில் உள்ளது.ஆலந்துார், கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து ஏரிக்கு வரும் மழை நீர், அங்கிருந்து, உபரி நீர் கால்வாய் வழியாக, சதுப்பு நிலத்தை அடைகிறது.வெள்ளம்பரங்கிமலை, கத்திப்பாரா பகுதியில் இருந்தும், அடையாறு ஆறு, அரை கி.மீ., துாரம் கொண்டது.
ஆனால், இங்குள்ள மழைநீர், நீரோட்ட பாதையில், ஆலந்துார், மடுவாங்கரை, நேதாஜி நகர் சாலை வழியாக, ஏரியை அடைந்து, அங்கிருந்து சதுப்பு நிலத்தை அடைகிறது.அரை கி.மீ., துாரத்தில், அடையாறு ஆற்றை அடைய வேண்டிய நீர், 5 கி.மீ., துாரம் பயணித்து, சதுப்பு நிலத்தை அடைகிறது. பரங்கிமலை, கத்திப்பாரா பகுதியின் நீரோட்டப் பாதை, வேளச்சேரி ஏரி மற்றும் சதுப்பு நிலம் தான் என, அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, மடுவாங்கரையில் இருந்து வேளச்சேரி ஏரி வரை உள்ள நீரோட்ட பாதை, முறையாக பராமரிக்கப்படாததால், நேதாஜி நகர் சாலையில், 3 அடி உயரத்தில் மழைநீர் தேங்கியது.மேலும், இந்த சாலையை சுற்றி உள்ள, 15க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வடிகால் அடைப்பு காரணமாக, மழை நீரை மோட்டார் வாயிலாக இறைத்து, நேதாஜி நகர் சாலையில் விடப்படுகிறது.பிரச்னைகடந்த, 2015ல் கொட்டி தீர்த்த மழையில், இதேபோன்று பாதிப்பு ஏற்பட்டபோது, நேதாஜி நகர் பகுதியை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது, 'நேதாஜி நகர் சாலையில் உள்ள, 2 அடி அகல வடிகால் போதுமானதாக இல்லை; சாலையின் இரு பகுதியிலும், 4 அடி அகலத்தில் வடிகால் கட்ட வேண்டும் அல்லது சாலை மையப் பகுதியில், 10 அடி அகல, மூடி கால்வாய் அமைக்க வேண்டும்' என, அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.இந்த, மடுவாங்கரையில் இருந்து ஏரி வரை உள்ள, நேதாஜி நகர் சாலை, 174 மற்றும், 177வது வார்டில் வருவதால், மதிப்பீடு தயாரிப்பது யார் என, இரண்டு வார்டு பொறியாளர்கள் இடையே பிரச்னை எழுந்தது.
அதன்பின், வார்டு பொறியாளர்கள் மாற்றம் காரணமாக, உயர் அதிகாரிகள் உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.பரங்கிமலை, கத்திப்பாரா, ஆலந்துார் பகுதி மழை நீரால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, நேதாஜி நகர் சாலையில் பெரிய அளவில் வடிகால் அல்லது மூடி கால்வாய் அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE