காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரத்தில், புதியதாக கட்டப்பட்டு வரும் ரேஷன் கடைக்கு, மின்மாற்றியின், 'ஸ்டே' கம்பி இடையூறாக உள்ளதால், கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், சின்ன காஞ்சிபுரம், கே.எம்.வி., நகரில், மின்மாற்றியின் அருகில், புதிய ரேஷன் கடை அமைக்க, செப்., 30ல், பூமி பூஜை போடப்பட்டது. தற்போது கட்டடத்திற்கு, கூரை அமைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.ரேஷன் கடை கட்டடத்திற்கு, அருகில் உள்ள மின்மாற்றியின், 'ஸ்டே' கம்பி இடையூறாக உள்ளதாக கூறி, கூரை அமைக்காமல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், 'ஸ்டே' கம்பியை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என, மின்வாரியத்துக்கு நகராட்சி சார்பில், பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.கட்டுமானப் பணிக்கு இடத்தை தேர்வு செய்யும்போதே, நகராட்சி அதிகாரிகள் சரியாக திட்டமிடாததால், ரேஷன் கடை கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே, இடையூறாக உள்ள 'ஸ்டே' கம்பியை இடமாற்றம் செய்ய, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கே.எம்.வி., நகர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE