கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், கூவம் ஆற்றுப் பகுதியில் கட்டப்பட்ட புதிய தடுப்பணையால், கசவநல்லாத்துார் ஏரிக்கு, 40 ஆண்டுகளுக்கு பின், நீர்வரத்து ஏற்பட்டது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடம்பத்துார் ஊராட்சியில் உள்ள கசவநல்லாத்துார் ஏரிக்கு கூவம் ஆற்றிலிருந்து நீர் வரும் வகையில், நீர்வரத்துக் கால்வாய் இருந்தது. இந்த கால்வாய் பராமரிப்பில்லாமல், புதர் மண்டிக் கிடந்ததால், ஏரிக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், தற்போது, கூவம் ஆற்றில் புதுமாவிலங்கை பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே, 7.80 கோடி ரூபாயில், புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதில், தற்போது பெய்த கன மழையில் தடுப்பணையில் நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், தடுப்பணை பகுதியிலிருந்து, கசவநல்லாத்துார் ஏரிக்கு வரும் நீர் வரத்துக் கால்வாயை, கடம்பத்துார் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, தன் சொந்த செலவில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம், முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொண்டார்.இதையடுத்து, நேற்று காலை, கசவநல்லாத்துார் ஏரியில், கூவம் ஆற்று தடுப்பணையில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய் மூலம், ஏரியில், 40 ஆண்டுகளுக்கு பின் நீர் சேகரமாகியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE