பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணா நீரில் மீன் பிடிக்கும் உள்ளூர்வாசிகள்

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : கிருஷ்ணா நீருடன், மழை நீர் கலந்து வரும் சாய்கங்கை கால்வாயில், உள்ளூர்வாசிகம் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தெலுங்கு திட்ட ஒப்பந்தப்படி, செப்., 21ம் தேதி முதல், தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது.கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே,

ஊத்துக்கோட்டை : கிருஷ்ணா நீருடன், மழை நீர் கலந்து வரும் சாய்கங்கை கால்வாயில், உள்ளூர்வாசிகம் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தெலுங்கு திட்ட ஒப்பந்தப்படி, செப்., 21ம் தேதி முதல், தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது.கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே, தமிழக எல்லையான, ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' வழியாக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. நேற்று, மதியம், 1:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர், வினாடிக்கு, 543 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

இதுவரை, 3.851 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில், மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மழை நீர், கிருஷ்ணா நீருடன் கலந்து வருகிறது. இதில், ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் பகுதியில் கிருஷ்ணா நீர் செல்லும் மதகுகளில் உள்ளூர்வாசிகள் மீன் பிடித்து வருகின்றனர்.சிலர், துாண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். சிறு மீன்கள் வலையில் சிக்குவதாக பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X