பொதட்டூர்பேட்டை : பேரூராட்சி வார சந்தையில் குவியும் காய்கறி கழிவுகளில் இருந்து, பேரூராட்சி நிர்வாகம், உரம் தயாரித்து வருகிறது.
வாரந்தோறும் இந்த பணி தொடர்ந்து வருகிறது.பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது வார சந்தை மைதானம். ஞாயிறுதோறும் வார சந்தை கூடுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சந்தைக்கு வருகின்றனர்.தக்காளி, முள்ளங்கி, கேரட் என, ஏராளமான காய்கறி கழிவுகள், சந்தை வளாகத்தில் குவிகிறது. திங்கட்கிழமை அதிகாலையில், துாய்மை பணியாளர்கள், இந்த கழிவுகளை, டிராக்டரில் ஏற்றி எடுத்து செல்கின்றனர். பேரூராட்சியின் உரக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் இந்த கழிவு, மண் கொட்டி மூடப்படுகிறது. மண் மூட்டத்திற்குள் அழுகும் இந்த கழிவு, உரமாக மாற்றப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE