உரம் ஆகிறது காய்கறி கழிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரம் ஆகிறது காய்கறி கழிவு

Added : டிச 07, 2020
Share
பொதட்டூர்பேட்டை : பேரூராட்சி வார சந்தையில் குவியும் காய்கறி கழிவுகளில் இருந்து, பேரூராட்சி நிர்வாகம், உரம் தயாரித்து வருகிறது. வாரந்தோறும் இந்த பணி தொடர்ந்து வருகிறது.பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது வார சந்தை மைதானம். ஞாயிறுதோறும் வார சந்தை கூடுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சந்தைக்கு வருகின்றனர்.தக்காளி, முள்ளங்கி, கேரட் என,

பொதட்டூர்பேட்டை : பேரூராட்சி வார சந்தையில் குவியும் காய்கறி கழிவுகளில் இருந்து, பேரூராட்சி நிர்வாகம், உரம் தயாரித்து வருகிறது.

வாரந்தோறும் இந்த பணி தொடர்ந்து வருகிறது.பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது வார சந்தை மைதானம். ஞாயிறுதோறும் வார சந்தை கூடுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சந்தைக்கு வருகின்றனர்.தக்காளி, முள்ளங்கி, கேரட் என, ஏராளமான காய்கறி கழிவுகள், சந்தை வளாகத்தில் குவிகிறது. திங்கட்கிழமை அதிகாலையில், துாய்மை பணியாளர்கள், இந்த கழிவுகளை, டிராக்டரில் ஏற்றி எடுத்து செல்கின்றனர். பேரூராட்சியின் உரக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் இந்த கழிவு, மண் கொட்டி மூடப்படுகிறது. மண் மூட்டத்திற்குள் அழுகும் இந்த கழிவு, உரமாக மாற்றப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X