பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.66 கோடிக்கு பாறைகள் ஏலம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
சென்னை : கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணியின்போது கிடைத்த உபரி பாறைகளை, 2.66 கோடி ரூபாய்க்கு ஏல முறையில் விற்பனை செய்ய, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இங்கு, 40 ஏக்கர் நிலத்தில், இதற்கான பணிகள் நடக்கின்றன.இந்த பணியின்போது கிடைத்த பாறைகள், மண்

சென்னை : கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணியின்போது கிடைத்த உபரி பாறைகளை, 2.66 கோடி ரூபாய்க்கு ஏல முறையில் விற்பனை செய்ய, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இங்கு, 40 ஏக்கர் நிலத்தில், இதற்கான பணிகள் நடக்கின்றன.இந்த பணியின்போது கிடைத்த பாறைகள், மண் ஆகியவற்றை கட்டுமான பணிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான விதிகள், கட்டுமான நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.இருப்பினும், பஸ் நிலைய கட்டுமான தேவைக்கு அதிகமாக, இங்கு பாறைகள், மண் கிடைப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு உபரி யாக கிடைக்கும்

பாறைகள், மண் ஆகியவை குறித்து, உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.இதன்படி, இந்த வளாகத்தில், 2.66 கோடி ரூபாய் மதிப்பிலான, பாறைகள், மண் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை விற்பதற்கான பொது ஏல அறிவிப்பை, சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.உள்ளது, உள்ளபடி என்ற அடிப்படையில், பாறைகள் விற்கப்பட உள்ளதாக தெரியவந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X