சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசில் சேர 4 வயது சிறுவன் சபதம் சீருடை அணிந்து அதிகாரியிடம் ஆசி

Added : டிச 07, 2020
Share
Advertisement
அடையாறு : போலீசில் சேர சபதம் எடுத்த, 4 வயது சிறுவன், தன் பிறந்த நாளில், சீருடை அணிந்து, அடையாறு துணை கமிஷனரிடம் வாழ்த்து பெற்றார். அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், கடந்தாண்டு, கரூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணி புரிந்தார். அப்போது, ஒரு கல்லுாரி விழாவில், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்வது என, விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.இந்த உரை, இரண்டு மாதமாக, சமூக

அடையாறு : போலீசில் சேர சபதம் எடுத்த, 4 வயது சிறுவன், தன் பிறந்த நாளில், சீருடை அணிந்து, அடையாறு துணை கமிஷனரிடம் வாழ்த்து பெற்றார்.
அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், கடந்தாண்டு, கரூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணி புரிந்தார். அப்போது, ஒரு கல்லுாரி விழாவில், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்வது என, விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.இந்த உரை, இரண்டு மாதமாக, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை, தரமணியைச் சேர்ந்த ஹரிஷ், 4, என்ற சிறுவன் பார்த்து உள்ளார்.'நானும் போலீஸ்அதிகாரியாக சேர்ந்து, பிறருக்கு முன்னுதாரணமாக இருப்பேன்' எனக் கூறி வந்துள்ளார்.

இதற்காக, அடம்பிடித்து பெற்றோரிடம் போலீஸ் சீருடை கேட்டுள்ளார்.வீட்டில், தினமும் சீருடை அணிந்து, போலீஸ் உடல் மொழி பேசி, பெற்றோரை உற்சாகப்படுத்தி வந்த சிறுவன், தன், 4ம் பிறந்தநாள் அன்று, விக்ரமன் சாரை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும்' என, தன் ஆசையை பெற்றோரிடம் கூறி உள்ளார்.இதன்படி, இரு தினங்களுக்கு முன், துணை கமிஷனர் விக்ரமனை, சீருடையில் சந்தித்த சிறுவன், பிறந்தநாள் வாழ்த்து பெற்று, 'உங்களை போல், போலீஸ் அதிகாரியாக ஆவேன்' என, சபதம் எடுத்தார்.சிறுவனின் இந்த செயலை, காவலர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X