பொது செய்தி

இந்தியா

'ஸ்புட்னிக்' தடுப்பூசி புனேவில் பரிசோதனை

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020
Share
Advertisement
புனே : கொரோனாவை தடுக்க ரஷ்யா தயாரித்துள்ள 'ஸ்புட்னிக்' தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை புனே மருத்துவமனையில் துவங்கியுள்ளது.கொரோனாவை தடுக்க ரஷ்ய சுகாதாரத்துறை ஸ்புட்னிக் என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்துள்ளது. 'இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை இந்தியாவில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை
Clinical trial, Sputnik V vaccine, Pune, volunteers

புனே : கொரோனாவை தடுக்க ரஷ்யா தயாரித்துள்ள 'ஸ்புட்னிக்' தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை புனே மருத்துவமனையில் துவங்கியுள்ளது.

கொரோனாவை தடுக்க ரஷ்ய சுகாதாரத்துறை ஸ்புட்னிக் என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்துள்ளது. 'இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை இந்தியாவில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'டாக்டர் ரெட்டி லேபரேட்டரீஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.


latest tamil news


இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள 'சிட்டி நோபிள்' மருத்துவனையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 17 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X