திருவான்மியூர் : வாகன சோதனையின்போது, போக்குவரத்து காவல் ஆய்வாளரை, காலால் எட்டி உதைத்த சினிமா பெண் உதவி இயக்குனர் மற்றும் அவரது ஆண் நண்பரை, போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூர், தெற்கு அவென்யூ சாலையில், நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர். அஅஅப்போது, அதே வழியாக வந்த, டி.என்: 07 சிடி6976 எண் கொண்ட சொகுசு காரை மடக்கினர். காரை ஓட்டி வந்த வாலிபரும், உடன் இருந்த இளம் பெண்ணும் போதையில் இருந்தனர்.இருவரையும், காரில் இருந்து இறங்க வைத்த போலீசார், போதை கண்டறியும் சோதனை செய்தனர். ஆவணங்களை வாங்கி விசாரித்தபோது, அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்த டோட்லாசேஷ பிரசாத், 27, காமினி, 21, என தெரிந்தது.
அஅடோட்லாசேஷபிரசாத், ஐ.டி., பொறியாளராக உள்ளார். காமினி, சினிமா இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம், உதவி இயக்குனராக பணி புரிவதாக கூறி உள்ளார்.ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவரும், அடிக்கடி பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நேற்று, கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கத்தில் உள்ள, காமினியின் நண்பர் பிறந்த நாள் பார்ட்டியில், இருவரும் பங்கேற்று மது அருந்தி உள்ளனர். போலீசார், இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்தனர். காரை பறிமுதல் செய்ய முயன்றபோது, காமினி, போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பனிடம், ''நான் யார் தெரியுமா; காரை பறிமுதல் செய்து விடுவியா:
உன்னால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது...'' என, தகாத வார்த்தைகளில் பேசினார். அஅடோட்லாசேஷ பிரசாத்தும், போலீசாரை தரக்குறைவாக பேசினார். ஒரு கட்டத்தில், காமினி, ஆய்வாளர் மாரியப்பனை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, நேற்று, மாரியப்பன், திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தை பேசி தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.காமினி, போதையில் போலீசாரிடம் தகராறு செய்து, தரக்குறைவாக பேசி, காலால் எட்டி உதைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE