ராகுலை விமர்சித்தது ஏன்? தேசியவாத காங்., விளக்கம்

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
மும்பை : 'காங்கிரஸ் எம்.பி. ராகுல் பற்றி சரத் பவார் விமர்சித்தது, மகனுக்கு தந்தை கூறிய அறிவுரையை போன்றது' என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங். தலைவர் சரத் பவார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'தேசத்தை வழி நடத்தும் தலைவராக
Rahul, Sharad Pawar, Congress,காங்கிரஸ், ராகுல், சரத் பவார்

மும்பை : 'காங்கிரஸ் எம்.பி. ராகுல் பற்றி சரத் பவார் விமர்சித்தது, மகனுக்கு தந்தை கூறிய அறிவுரையை போன்றது' என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங். தலைவர் சரத் பவார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'தேசத்தை வழி நடத்தும் தலைவராக மாறுவதில் ராகுலுக்கு பக்குவம் போதவில்லை' என்றார்.


latest tamil news



இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் 'எங்கள் கட்சி தலைமை பற்றி விமர்சிப்பதை கூட்டணி கட்சிகள் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் மஹாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நிலைக்காது' என காட்டமாக கூறியது.

இத்நிலையில் தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறியதாவது: ராகுலை பற்றி சரத் பவார் கூறியவை மகனுக்குதந்தை கூறிய அறிவுரையாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில்அவர் காங்கிரசை விமர்சிக்கவில்லை.மேலும் ராகுல் பற்றி அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு சரத் பவார் கடும் கண்டனம் தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
07-டிச-202014:10:53 IST Report Abuse
mathimandhiri இவுக ரெண்டு பேருமே ரொம்ப நாட்டுக்கு ரொம்ப ரொம்ப தேவையானவங்க தான்.- - அப்புறம் இந்த பப்பு போட்டோ ...உண்மையில் அருமை. இதையே ஸ்டாண்டர்ட் ஆக பின் பற்றும் படிக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-டிச-202013:17:27 IST Report Abuse
Ramesh Sargam அந்த தந்தை-மகன் உறவுதான் என்றோ அறுந்துபோய் விட்டதே. இப்ப என்ன தந்தை மகனுக்கு அறிவுரை கூற வந்துவிட்டார்??
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
07-டிச-202013:12:19 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy அந்த காலத்திலேயே சாணக்கியர் (கூட்டணி குறித்து) கூறியதாவது "பகுநாயகம் விநஸ்யதி ". பல தலைமையால் ஆளப்படும் நாடு நாசமடையும் . கர்நாடகவில் நாசம் அடைந்ததை பார்த்தோம். தற்போது மஹாராஷ்டிராவில் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் 'எங்கள் கட்சி தலைமை பற்றி விமர்சிப்பதை கூட்டணி கட்சிகள் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் மஹாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நிலைக்காது' என காட்டமாக கூறியது. அடுத்து செயலில் இறங்கும். அரசியலில் சாணக்கிய நீதி என்றும் பொருத்தமாகவே உள்ளது. காங்கிரஸ்ய் பங்கு போட பி ஜே பி யும் பவாரும் தயாராக உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X