விவசாயிகளை ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்?

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (117)
Share
சென்னை : தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி தி.மு.க. விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 23ம்பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேளாண்
DMK,MK Stalin,Stalin,திமுக,ஸ்டாலின்

சென்னை : தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி தி.மு.க. விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 23ம்பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும். இதன் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெற வேண்டும். இதற்கு உதவும் வகையில் உற்பத்தியாளரையும் வாங்குவபரையும் இணைக்க அரசும் உற்பத்தியாளர்களும் இணைந்து நிர்வகிக்கும் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மத்திய வேளாண் சட்டங்களிலும் இந்த கருத்துக்கள்தான் முக்கியமாக இடம் பெற்றுள்ளன. அப்படி என்றால் தி.மு.க.வின் விருப்பத்தை கோரிக்கையை தான் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியதும் தேசிய அளவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதும் முரண்பாடாக உள்ளது.

தி.மு.க.வின் இந்த முரண்பாடு குறித்த விபரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை அறிந்த விவசாயிகள் தங்களை தி.மு.க. ஏமாற்றி மத்திய அரசுக்கு எதிராக திரும்ப வைக்கிறதா என சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.


சரத்பவாருக்கும் சிக்கல்


மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங். தலைவர் சரத்பவார் 2010 ஆகஸ்டில் டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை ஏற்படுத்த வேண்டும்; இடைத்தரகர்கள் இன்றி விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்ய வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தற்போது அதே கோரிக்கையை வேளாண் சட்டங்கள் வாயிலாக நிறைவேற்றியுள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது பா.ஜ. அரசு எதைச் செய்தாலும் குறை கூற வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டை காட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X