பொது செய்தி

இந்தியா

புகையிலை எச்சரிக்கை: மத்திய அரசு உத்தரவு

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: 'புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்' என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களுக்கான விதிகள் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகளில்
EnsureImplementation, HealthWarnings, TobaccoProducts, Centre, புகையிலை, எச்சரிக்கை, மத்திய அரசு

புதுடில்லி: 'புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்' என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களுக்கான விதிகள் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகளில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புகையிலை பொருட்களுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகள் ஜூன் 21ல் வெளியிடப்பட்டன.


latest tamil news


இதன்படி, புகையிலை பொருட்களின் அட்டைகளின் இரு பக்கமும் 85 சதவீத பகுதியில் புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும். இதன் மூலம் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதனால் கடந்த டிச.1ம் தேதிக்கு பின் தயாரிக்கப்படும் அனைத்து புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் அட்டைகளில் புதிய சுகாதார எச்சரிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-202023:54:59 IST Report Abuse
தமிழவேல் கஞ்சாவுக்கு வரி இல்லாததால சிகரெட்டைவிட கஞ்சா விலை கம்மியாமே ? உண்மையா 🤔
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-202023:50:02 IST Report Abuse
தமிழவேல் இங்கிலிஷ் படிக்கத் தெரிந்தவன் மட்டுந்தான் புகைக்கலாமுன்னு தோணுது.. அல்லது இங்கிலிஷ் தெரியுமான்னு விசாரிச்சி கணபர்ம் பண்ணிக்கிட்டு குடுப்பாங்களோ.. 🤔
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-டிச-202021:53:01 IST Report Abuse
Anantharaman Srinivasan எத்தனை %%%% விளம்பரம் பெரிதாக செய்தாலும் தேடிப்போய் புகைப்பவர் கண்ணுக்கு தெரியாது.. டீ கடை மாதிரி ஆங்காங்கே புகை சென்டர்கள் திறந்து அங்குதான் பிடிக்கவேண்டும் எனவும் பொது வெளியில் பிடிக்க தடை விதிக்க வேண்டும்.. பிடிப்பவர் விடும் புகை மற்றவர்களை பாதிக்கிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X