புகையிலை எச்சரிக்கை: மத்திய அரசு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புகையிலை எச்சரிக்கை: மத்திய அரசு உத்தரவு

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (22)
Share
புதுடில்லி: 'புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்' என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களுக்கான விதிகள் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகளில்
EnsureImplementation, HealthWarnings, TobaccoProducts, Centre, புகையிலை, எச்சரிக்கை, மத்திய அரசு

புதுடில்லி: 'புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்' என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களுக்கான விதிகள் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிகளில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புகையிலை பொருட்களுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகள் ஜூன் 21ல் வெளியிடப்பட்டன.


latest tamil news


இதன்படி, புகையிலை பொருட்களின் அட்டைகளின் இரு பக்கமும் 85 சதவீத பகுதியில் புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும். இதன் மூலம் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதனால் கடந்த டிச.1ம் தேதிக்கு பின் தயாரிக்கப்படும் அனைத்து புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் அட்டைகளில் புதிய சுகாதார எச்சரிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X