மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே உள்ள நூலகம், செயல்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். நடுவனேரி ஊராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2006ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், காளியம்மன் கோவில் அருகே நூலகம் திறக்கப்பட்டது. அதை சரியாக பராமரிக்காததால், புத்தகங்கள் கிழிந்துள்ளன. மேலும் கட்டடத்தின் கதவு, ஜன்னல்கள் திருடப்பட்டுள்ளன. தற்போது, கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் நூலகம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE