ஓமலூர்: மாடுகளுக்கு, தட்டம்மை நோய் வேகமாக பரவுவதால், மருத்துவ முகாம் அதிகளவு நடத்த வேண்டியது அவசியம் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பெருமாள் கோவில், முத்துநாயக்கன்பட்டி, பெரியேரிப்பட்டி, எம்.செட்டிப்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி ஆகிய பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. மாடுகளை கடிக்கும் கொசு, ஈக்கள் மூலம், தட்டம்மை நோய் மாடுகளுக்கு பரவுகிறது. பெரியேரிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட மாடுகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. தட்டம்மையால் ஒரு மாட்டுக்கு, 5,000 ரூபாய் வரை செலவு செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிக்கம்பட்டி கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷிணி கூறியதாவது: தொளசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில், தட்டம்மை நோய் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் மாட்டுச்சந்தையில், வெளி மாவட்டத்திலிருந்து நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் கொண்டு வரப்படுவதால், நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 200 மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஓமலூர் கால்நடை உதவி இயக்குனர் செல்வகுமார் கூறுகையில், ''நாளை (இன்று) பெருமாள்கோவில், பெரியேரிப்பட்டி, தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி, தொட்டம்பட்டி ஆகிய பகுதியில் சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE