சேலம்: அம்பேத்கரின், 64வது நினைவு தினமான நேற்று, சேலத்தில் அவரது சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம், மரவனேரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே தலைமையில், பா.ஜ.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், மாஜி எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க., சார்பில், ஆதிதிராவிடர் நலக்குழு மாநகர அமைப்பாளர் தேவதாஸ், காங்., சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையிலான கட்சியினர், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் முருகேசன் தலைமையிலான கட்சியினர், மாலை அணிவித்தனர். ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், வி.சி., கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE