பொது செய்தி

தமிழ்நாடு

80 நாடுகளின் பெயர்களை சரளமாக கூறும் சிறுவன்

Added : டிச 07, 2020
Share
Advertisement
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், இரண்டரை வயது சிறுவன், 80 நாடுகள், கார்களின் பெயர்களை சரளமாக கூறி, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறான். சேலம், செவ்வாய்ப்பேட்டை, சாந்தலிங்க மூர்த்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 33. இவர் மனைவி நந்தினி, 30. இருவரும் இன்ஜினியர்கள். இவர்களின், இரண்டரை வயது மகன் தேஜேஸ், இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. கடந்த மாதம் சிறுவனுக்கு, ஏ,பி,சி,டி,

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், இரண்டரை வயது சிறுவன், 80 நாடுகள், கார்களின் பெயர்களை சரளமாக கூறி, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறான். சேலம், செவ்வாய்ப்பேட்டை, சாந்தலிங்க மூர்த்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 33. இவர் மனைவி நந்தினி, 30. இருவரும் இன்ஜினியர்கள். இவர்களின், இரண்டரை வயது மகன் தேஜேஸ், இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. கடந்த மாதம் சிறுவனுக்கு, ஏ,பி,சி,டி, சொல்லிக் கொடுத்த நிலையில், அவன் அடுத்த நாளே சரளமாக எந்தவித தயக்கமும் இன்றி சொல்லி உள்ளான். இதையடுத்து அவனது தாய், 80க்கும் மேற்பட்ட நாடுகள், அவற்றின் கொடிகளை விளக்கியதோடு, 80க்கும் மேற்பட்ட கார்களின் லோகோவையும் விளக்கி உள்ளார். தற்போது சிறுவன், நாடுகளின் கொடிகளை காண்பித்தால், அது எந்த நாட்டு கொடி என்பதையும், கார்களின் பெயர்களையும் சரளமாக கூறி வருகிறான். சிறுவனை, பொதுமக்கள் பாராட்டுகின்றனர். சிறுவனின் ஞாபகசக்தியை பாராட்டும் வகையில், ட்ரீம் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழும், இந்தியா புக் ரெக்கார்டு சான்றிதழும் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X