உழவர் சந்தையில் மழைநீர்; விவசாயிகள், மக்கள் பாதிப்பு

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஆத்தூர்: மழையால், ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஆத்தூர், புதுப்பேட்டை உழவர் சந்தையில், 69 கடைகளுக்கு மட்டுமே மேற்கூரைகளுடன் கடைகள் உள்ளன. மற்ற விவசாயிகள் 70 பேர் தரையில் கடை அமைத்தே காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். நேற்று, 164 விவசாயிகள், 46 ஆயிரத்து, 896 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 'புரெவி' புயல் காரணமாக, நேற்று காலை, 7:00

ஆத்தூர்: மழையால், ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஆத்தூர், புதுப்பேட்டை உழவர் சந்தையில், 69 கடைகளுக்கு மட்டுமே மேற்கூரைகளுடன் கடைகள் உள்ளன. மற்ற விவசாயிகள் 70 பேர் தரையில் கடை அமைத்தே காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். நேற்று, 164 விவசாயிகள், 46 ஆயிரத்து, 896 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 'புரெவி' புயல் காரணமாக, நேற்று காலை, 7:00 முதல், 9:00 மணி வரை மழை பெய்தது. இதனால், தரை தளத்தில் கடைகள் அமைத்திருந்த விவசாயிகள் அவதிப்பட்டனர். மழை நீர் ஓடியதால், கடைகளை போட்டுவிட்டு நிழற்கூடத்தில் தஞ்சமடைந்தனர். சந்தையின் இருபுற வழிப்பாதை முன், மழை நீர் சேறும் சகதியுமாக தேங்கி நின்றதால், உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மழையால், விலையை குறைத்து காய்கறிகளை விவசாயிகள் விற்றனர். உழவர் சந்தை மற்றும் வெளிப்புற வளாகத்தில், மழை நீர் வடிகால் அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X