தர்மபுரி: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள, அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் அன்பழகன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று தர்மபுரி கோல்டன் தெருவிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, தி.மு.க., மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பார்த்தசாரதி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர்கள் அன்பரசன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். வி.சி., சார்பில், மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையிலும், பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமையிலும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE