அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தம்பிச்செட்டிபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 62, அ.தி.மு.க., கிளை செயலாளர்; கடந்த, 2ல், அப்பகுதியில் உள்ள ஜூஸ் பேக்டரி சுற்றுச் சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக, அவருக்கும், அ.ம.மு.க.,வினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், ஆறுமுகத்தை, அ.ம.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முருகன், கனகராஜ் இருவரும் ஆபாச வார்த்தையால் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆறுமுகம் புகாரின்படி, முருகன், கனகராஜ், முன்னாள் சேர்மன் தென்னரசு, ஏகநாதன், சிற்றரசு, செல்வம், கமல், நரசிம்மன் உள்ளிட்ட, எட்டு பேர் மற்றும் சிலர் மீது, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நரசிம்மன், குமார் ஆகிய இருவர், கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அரூர் நகர, அ.ம.மு.க., செயலாளர் செல்வத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE