சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்திய இரண்டு பேர் கைது

Added : டிச 07, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: லாரியில், குட்கா பொருட்களை கடத்திய, டிரைவர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு, குட்கா பொருட்கள் கடத்துவதாக, சேலம் சரக, குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, எஸ்.ஐ., சக்தி, தலைமையிலான போலீசார் பர்கூர் பஸ் நிறுத்தத்தில், நேற்று

கிருஷ்ணகிரி: லாரியில், குட்கா பொருட்களை கடத்திய, டிரைவர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.


கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு, குட்கா பொருட்கள் கடத்துவதாக, சேலம் சரக, குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, எஸ்.ஐ., சக்தி, தலைமையிலான போலீசார் பர்கூர் பஸ் நிறுத்தத்தில், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த, ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, லாரி டிரைவரும், உரிமையாளருமான பர்கூர், கோட்டூரை சேர்ந்த வடிவேல், 40 மற்றும் கிளீனர் வேல்முருகன், 30 ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், குஜராத்திலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு, சென்னைக்கு லாரி சென்றது. அப்போது, பெங்களூரு அடுத்த நைஸ் ரோடு டோல்கேட் அருகே, லாரியை நிறுத்திய மர்ம நபர்கள், சில பார்சல்களை சென்னையில் கொடுத்தால், 5,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு, லாரி டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் பார்சலை ஏற்றி வந்தபோது, பர்கூர் அருகே போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். இது குறித்து, பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X