சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து மோதியதில் கவிழ்ந்த இரண்டு லாரிகள்

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய விபத்தில், கன்டெய்னர் லாரி உட்பட இரு லாரிகள் கவிழ்ந்தன. இதில், லாரி டிரைவர் காயமடைந்தார்.ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த அழகுபாவி அருகே, நேற்று காலை, 9:30 மணிக்கு, கார், கன்டெய்னர் லாரி, இரும்பு துகள் ஏற்றிச்சென்ற லாரி என, மூன்று வாகனங்கள், ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக சென்றன. அப்போது,

ஓசூர்: சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய விபத்தில், கன்டெய்னர் லாரி உட்பட இரு லாரிகள் கவிழ்ந்தன. இதில், லாரி டிரைவர் காயமடைந்தார்.


ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த அழகுபாவி அருகே, நேற்று காலை, 9:30 மணிக்கு, கார், கன்டெய்னர் லாரி, இரும்பு துகள் ஏற்றிச்சென்ற லாரி என, மூன்று வாகனங்கள், ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக சென்றன. அப்போது, சாலையில் முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க, கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால், பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய கார், சென்டர் மீடியனை கடந்து, மறுபுறம் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. சாலையில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி மீது, இரும்பு துகள் ஏற்றிச்சென்ற லாரி மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியை ஓட்டிச்சென்ற, சேலம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜன், 47, என்பவர் காயமடைந்தார். அவரை, போராடி மீட்ட பொதுமக்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X