பொது செய்தி

தமிழ்நாடு

இடம் பெயர்ந்த ஒற்றை யானை; அச்சத்தில் ஓட்டம் பிடித்த மக்கள்

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், சானமாவு வனப்பகுதியில் இருந்து, தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்த ஒற்றை யானையை கண்டு, பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 65 வயது மதிக்கத்தக்க, கிரி என்ற வயதான ஒற்றை ஆண் யானை, கடந்த சில நாட்களுக்கு முன், ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சானமாவு வனப்பகுதிக்கு இடம்

ஓசூர்: ஓசூர், சானமாவு வனப்பகுதியில் இருந்து, தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்த ஒற்றை யானையை கண்டு, பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 65 வயது மதிக்கத்தக்க, கிரி என்ற வயதான ஒற்றை ஆண் யானை, கடந்த சில நாட்களுக்கு முன், ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. நேற்று அதிகாலை அங்கிருந்து வெளியேறிய யானை, ஜெக்கேரி, கோட்டட்டி, புதூர், பொம்மதாத்தனூர் உட்பட கிராமங்கள் வழியாக, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட சூரப்பன் குட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அதிகாலையில், விவசாய நிலத்துக்கு சென்ற மக்கள், ஒற்றை யானை செல்வதை பார்த்து, அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். அந்த யானைக்கு வயதான காரணத்தால், அது யாரையும் தாக்க முற்படுவது இல்லை என, வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் யானையை பார்த்த மக்கள் அச்சத்தால், சத்தம் போட்டு யானையை விரட்டினர். யானை சென்ற வழியில், பீன்ஸ், முட்டைகோஸ் தோட்டங்கள் நாசமானதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X