பொது செய்தி

இந்தியா

ஸ்டாலினும் தான், முட்டியளவு தண்ணீரில் நடந்து மழை சேத விபரத்தை பார்த்தாரே; அது போதாதா..

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரையில் குடிநீர் பற்றாக்குறையே இனி வராது. முதல்வர், மக்களை நேரடியாக சென்று சந்தித்து வருகிறார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்கிறார்.- அமைச்சர் வேலுமணி'ஸ்டாலினும் தான், நேற்று முன்தினம், கடலுாரில், முட்டியளவு தண்ணீரில் நடந்து சென்று, மழை சேத விபரத்தை பார்த்தாரே; அது போதாதா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக
ஸ்டாலினும் தான், முட்டியளவு தண்ணீரில் நடந்து மழை சேத விபரத்தை பார்த்தாரே; அது போதாதா..

மதுரையில் குடிநீர் பற்றாக்குறையே இனி வராது. முதல்வர், மக்களை நேரடியாக சென்று சந்தித்து வருகிறார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்கிறார்.
- அமைச்சர் வேலுமணி


'ஸ்டாலினும் தான், நேற்று முன்தினம், கடலுாரில், முட்டியளவு தண்ணீரில் நடந்து சென்று, மழை சேத விபரத்தை பார்த்தாரே; அது போதாதா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேச்சு.



ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பிரித்து வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளது. அதனால், மத்திய தொகுப்பு வழங்க, 'டோக்கன்' வினியோகிக்கும் போது சிக்கல் ஏற்படுகிறது. ஸ்மார்ட் கார்டு குளறுபடிகளை சரிசெய்யாமல் பொருட்களை மட்டும் வினியோகிக்க, அரசு சொல்கிறது.
- பொது விநியோக ஊழியர் சங்க மாநில தலைவர் பால்ராஜ்


'மக்களுக்கு பொருட்களை வினியோகிக்க வேண்டாம்; சும்மா இருக்க, அரசு உத்தரவிட வேண்டும் என, சங்கத்தினர் கேட்டாலும் கேட்பீர்கள் போலிருக்கிறதே...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், பொது விநியோக ஊழியர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் பேட்டி.



'கோவில் நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது; கோவிலுக்கே பயன்பட வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கோவில் நிலங்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி, விரைவில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
- ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்


'கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், வெளிநாட்டுக்காரர்களா; நம்மவர்கள் தானே; அதை கண்டுகொள்ளாமல் இருந்ததும், நம் தவறு தானே...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி.



எண்ணற்ற திட்டங்களை, இந்த அரசு செய்து வருகிறது. யார் எந்தக் கட்சி துவக்கினாலும், ஒன்றும் செய்ய முடியாது. அதனால், 2021 தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்.
- அமைச்சர் ராஜு


latest tamil news




'மக்களுக்கு சேவையாற்றத் தான், மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்; அதைப் பெருமையாக கூறிக் கொள்வதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு பேச்சு.



எத்தனை ரஜினி வந்தாலும், தி.மு.க.,விற்கு பாதிப்பில்லை. 1996ல் மக்கள் மனநிலை வேறு; தற்போதைய மனநிலை வேறு.
- தி.மு.க., மாநில துணை பொதுச்செயலர் செல்வராஜ்


'கடந்த, '96ல், தி.மு.க.,வுக்கு வரவேற்பு அதிகம்; இப்போது, அப்படியில்லையே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., மாநில துணை பொதுச்செயலர் செல்வராஜ் பேட்டி.



வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி கண்டிப்பாக போட்டியிடும். தற்போதைய நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ளோம். அக்கட்சியிடம், ஐந்து தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்.
- த.ம.மு.க., தலைவர் ஜான்பாண்டியன்


'ஐந்து கேட்டால் தான், ஒன்றாவது கிடைக்கும் என்ற எண்ணமோ... என, கேட்கத் தோன்றும் வகையில், த.ம.மு.க., தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202017:29:05 IST Report Abuse
J.V. Iyer கோவில் நிலங்களையும், சொத்துக்களையும் ஆட்டை போடும் கட்சிகளுக்கு ஹிந்துக்கள் வோட்டு போடக்கூடாது. இது தான் ஆன்மீக மக்களின் தீர்ப்பு.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202017:27:06 IST Report Abuse
J.V. Iyer ரஜனி வருகிறார் என்று கேள்வி பட்டவுடன் திமுக தலைவர்கள் ... விட்டு வெளிய வரவில்லை என்று கேள்வி.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
07-டிச-202014:56:58 IST Report Abuse
S. Narayanan ஒட்டு ட்ராமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X