பொது செய்தி

தமிழ்நாடு

1 ஏக்கர் நிலத்தில் 15 வகை பயிர் சாகுபடி: கொளத்தூர் இயற்கை விவசாயி அசத்தல்

Added : டிச 07, 2020
Share
Advertisement
மேட்டூர்: ஒரு ஏக்கர் நிலத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், 15 வகை பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து விவசாயி சாதனை படைத்துள்ளார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்தூர் மூலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 54, மனைவி ஷியாமளா, 45. சுகாதாரத்துறை அலுவலராக பணிபுரிந்த குணசேகரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மனைவி ஷியமளா எம்.எஸ்சி., சைக்காலஜி படித்து, ஆயத்த ஆடை

மேட்டூர்: ஒரு ஏக்கர் நிலத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், 15 வகை பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து விவசாயி சாதனை படைத்துள்ளார்.


சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்தூர் மூலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 54, மனைவி ஷியாமளா, 45. சுகாதாரத்துறை அலுவலராக பணிபுரிந்த குணசேகரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மனைவி ஷியமளா எம்.எஸ்சி., சைக்காலஜி படித்து, ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டார். தம்பதியர்கள் பார்வை இயற்கை விவசாயத்தின் மீது திரும்பியது. இதையடுத்து, ஐந்து ஏக்கர் நிலத்தில் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி, கருப்பு கவுனி அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். மேலும், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், ஒரு ஏக்கர் நிலத்தில், 15 வகை பயிர்களை சாகுபடி செய்து தம்பதியர் அசத்தியுள்ளனர்.

இது குறித்து, குணசேகரன் கூறியதாவது: விவசாயத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி என்பது, ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்டி தரும். ஒரே நிலத்தில் மரங்கள், செடிகள், கொடிகள் வளர்க்கும் முறையாகும். என் நிலத்தில் தென்னை, பப்பாளி, வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள், அதன் அருகில், சேனைகிழங்கு, தக்காளி, இஞ்சி, மஞ்சள், மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி செடிகள், பீர்க்கங்காய், புடலை, பாவக்காய் உள்ளிட்ட கொடி வகைகள், உளுந்து, பச்சபயிறு மற்றும் பூ வகைகள் என, 15 வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ளேன். காய்கறிகள் மூலம் தினசரி, வாரம், மரங்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் மூன்று முறை வருவாய் ஈட்ட முடிகிறது. நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே நிலத்தில், பலவகை செடிகள் நடவு செய்வதால், அதன் வாசனையில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பூச்சிகள் தாக்கம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X