குளித்தலை: அய்யர்மலை, ரோப்கார் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். பக்தர்கள் பங்களிப்புடன், ஹிந்து சமய அறநிலைய துறையின் சார்பில் ரோப்கார் (கம்பிவடம் ஊர்தி) அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, தொய்வு நிலையில் பணி நடக்கிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE