அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு சீன கம்யூ., அரசால் அச்சுறுத்தல்

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள, 80 சீன நிறுவனங்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், இந்நிறுவனங்கள் குறித்து விபரங்கள் அறியாமல், அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருவதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீன

வாஷிங்டன்:அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள, 80 சீன நிறுவனங்கள், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், இந்நிறுவனங்கள் குறித்து விபரங்கள் அறியாமல், அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருவதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீன கம்யூனிஸ்ட் அரசால், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல், பங்குச் சந்தை வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவைச் சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அமெரிக்க பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள், பொது மக்களுக்கான பொருட்களை தயாரிப்பதுடன், ராணுவ தளவாடங்கள் உற்பத்தியிலும் இடம்பெற்றுள்ன.இந்த விபரம் தெரியாமல், அந்த நிறுவனங்களில், அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர்.அதில் சில நிறுவனங்கள், பொதுமக்களை கண்காணித்து, மனித உரிமைகளை ஒடுக்கும் தொழில்நுட்ப உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த, உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சில சிறுபான்மையினர் மற்றும் மேற்காசிய நாடான, ஈரான், தென் அமெரிக்க நாடான, வெனிசுலா ஆகிய நாடுகளில், இந்த ஒடுக்குமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன.

சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழிநுட்ப கழகம், சீன விமான போக்குவரத்து கழகம், சீன கப்பல் கட்டுமான கழகம், 'ஹூவேய் டெக்னாலஜிஸ்' உட்பட பல்வேறு நிறுவனங்கள், அமெரிக்க பங்குச் சந்தைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இந்த நிறுவனங்கள் அனைத்தும், சீன கம்யூனிஸ்ட் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.இவ்வாறு , அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X