தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் குறைவு: முக கவசம் அணியாமல் மக்கள் அலட்சியம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
நாமக்கல்: கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மாவட்ட நிர்வாகம், பல்வேறு அரசுத்துறைகள் எடுத்து நடவடிக்கை காரணமாக, படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில், தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,

நாமக்கல்: கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மாவட்ட நிர்வாகம், பல்வேறு அரசுத்துறைகள் எடுத்து நடவடிக்கை காரணமாக, படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில், தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 150க்கும் மேல் இருந்து வந்த நிலையில், தற்போது, 50க்கும் கீழ் குறைந்துள்ளது. இது, தொற்று பரவல் பீதியில் இருந்த மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இருந்தும், பொதுமக்கள் வெளியே வரும்போது, முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு, கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அரசின் விதிமுறைகளை மக்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். வெளியே செல்லும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பது மாவட்டம் முழுவதும் காணமுடிகிறது. இந்த அலட்சியப்போக்கு, மீண்டும் கொரோனா தொற்று பரவுதலை அதிகரிக்க செய்யும் என்பதை, மக்கள் உணராமல் இருப்பது, கவலையை அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, கொரோனா தொற்று பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அவற்றை, பொதுமக்கள் உணர்ந்து, அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதே, சமூக அக்கறை உள்ளவர்களின் எண்ணம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X