நாமக்கல்: தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின், செயற்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் வேல் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ, பொருளாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் செல்ல ராசாமணி ஆகியோர் பேசினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெற, கடந்த, 10 நாட்களாக, டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு, ஆதரவு தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதற்குரிய தீர்வு உடனடியாக காண வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்க வேண்டும் என, வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்ற கூட்டமைப்பின் இணை செயலாளர் செல்வகுமாருக்கும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி. வக்கீல்கள் மீது, காவல் துறையினரால், பொய் வழக்கு பதிவு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE